34 விரல்களுடன், ஒரு அதிசய குழந்தை!
உத்தரப்பிரதேச மாநிலம், பரேய்லியைச் சேர்ந்த ஒரு ஆண் குழந்தை, பிறக்கும் போதே, கின்னஸ் சாதனையுடன் பிறந்திருக் கிறது. இந்த குழந்தைக்கு, கை களிலும், கால்களிலும், 34 விரல்கள் இருக்கின்றன.குழந்தைக்கு விரல்கள் இருக் கலாம்; ஆனால், விரல்களே குழந் தையாக இருக்கலாமா! இப்படி ஒரு குழந்தை பிறந்ததும், குழந்தையின் தாய் அமிர்தா, பெரும் சோகத்தில் மூழ்கினார். அப்போது தான், குடும்ப நண்பர் ஒருவர், ஆச்சரிய மான ஒரு தகவலை கூறினார்.'உலகிலேயே, அதிக விரல்கள் உள்ள குழந்தை, சீனாவில் இருக்கிறது; ஆனால், அந்த குழந்தைக்கு, 31 விரல்கள் தான் உள்ளன. அந்த குழந்தை, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது. தற்போது, உங்கள் குழந்தைக்கு, 34 விரல்கள் இருப்பதால், சீன குழந்தையின் சாதனையை, உங்கள் குழந்தை முறியடித்து விட்டது. இதுகுறித்து கின்னஸ் புத்தகத்துக்கு எழுதிப் போடுங்கள்...' என, அந்த நண்பர் கூறினார்.ஆச்சரியம் அடைந்த அமிர்தா, கின்னஸ் புத்தக நிர்வாகத்தை தொடர்பு கொண்டு, அந்த தகவலை உறுதி செய்தார். முறைப்படி, கின்னஸ் புத்தகத்துக்கு விண்ணப் பித்தார். தன் குழந்தைக்கு, 34 விரல்கள் இருப்பதற்கான புகைப் பட ஆதாரங்களையும், மின் அஞ்சல் வழியாக அனுப்பி வைத்தார். தற்போது, கின்னஸ் புத்தகத்தில், அதிக விரல்கள் உடைய குழந்தையாக, அக்ஷாத் இடம் பெற்று விட்டான். குழந்தை பிறந்த போது, சோகத்தில் மூழ்கிய பெற்றோர், தற்போது தங்கள் குழந்தை, கின்னஸ் குழந்தையாக மாறி விட்டதை நினைத்து, ஆனந்த கண்ணீர் வடிக்கின்றனர்.— ஜோல்னா பையன்.