பட்டப்படிப்பு முடித்தவருக்கு ரயில்வேயில் 119 காலியிடங்கள்
இந்திய ரயில்வேயில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 'செக்சன் கன்ட்ரோலர்' பிரிவில் மொத்தம் 119 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு வயது: 20-33 (1.7.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, மருத்துவ சோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250 கடைசிநாள்: 14.8.2026 விவரங்களுக்கு: rrbchennai.gov.in