உள்ளூர் செய்திகள்

உளவுத் துறையில் 1300 பணி

மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் உளவுத் துறை இன்டலிஜென்ஸ் பீரோ (ஐ.பி.,) என்ற பெயரால் பெரிதும் அறியப்படுகிறது. இந்த அமைப்பில் காலியாக இருக்கும் மத்திய துணை உளவு அதிகாரி ( அசிஸ்டென்ட் சென்ட்ரல் இண்டலிஜென்ஸ் ஆபிசர்) பிரிவிலான 1300 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த இடங்களில் அரசு நிபந்தனைகளின்படி இட ஒதுக்கீடும் உள்ளது.வயது : விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் கம்ப்யூட்டர் தொடர்புடைய திறனும் கூடுதலாக தேவைப்படும்.தேர்ச்சி முறை : உளவு அதிகாரி பதவிக்கான தேர்ச்சி முறை டயர் 1 மற்றும் டயர் 2 என்ற இரண்டு நிலைகளாக நடத்தப்படும். முதல் நிலையில் அப்ஜெக்டிவ் வகையிலான தேர்வு ஜெனரல் அவேர்னஸ், குவாண்டிடேடிவ் ஆப்டியூட், லாஜிக்கல்/அனலிடிகல் எபிலிடி, இங்கிலீஷ் லாங்குவேஜ் ஆகிய பகுதிகளைக் கொண்டிருக்கும். இரண்டாவது பிரிவில் டெஸ்கிரிப்டிவ் வகைத் தேர்வில் கட்டுரை, சுருக்கி எழுதுதல் காம்ப்ரிஹெசன் ஆகிய பகுதிகள் இருக்கும்.தேர்வு மையம் : தமிழகத்தில் சென்னையில் மட்டும் இந்த எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க : ஆன்லைன் முறையிலேயே இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.கடைசி நாள் : 2017 செப்., 2.விபரங்களுக்கு : www.mha.nic.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !