தமிழக அரசு பள்ளிகளில் 1,663 ஆசிரியர் பணி
டீச்சர்ஸ் ரெக்ரூட்மெண்ட் போர்டு எனப்படும் டி.ஆர்.பி., அமைப்பு, தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை எழுத்துத் தேர்வு மூலமாக நிரப்பி வருவது நாம் அறிந்ததே. இந்த அமைப்பின் சார்பாக முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை (பி.ஜி., அசிஸ்டென்ட்) நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 1,663 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.காலியிட விபரம்: தமிழில் 218, ஆங்கிலத்தில் 231, கணிதத்தில் 180, இயற்பியலில் 176, வேதியியலில் 168, தாவரவியலில் 87, விலங்கியலில் 102, வரலாறு 146, புவியியலில் 18, பொருளாதாரம் 139, காமர்சில் 125, பொலிடிகல் சயின்சில் 24, பயோ-கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி மற்றும் தெலுங்குவில் தலா 1, ஹோம் சயின்சில் 7, கிரேடு 1 உடற்கல்வி ஆசிரியரில் 39 சேர்த்து மொத்தம் 1,663 இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வயது: 1.7.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 57 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவில் முதுநிலைப் பட்டப்படிப்புடன் பி.எட்., படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து அறியவும்.தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலமாக இருக்கும்.விண்ணப்பக் கட்டணம்: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500. இதனை ஆன்லைன் முறையில் நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வாயிலாக செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 2017 மே 30.எழுத்துத் தேர்வு நாள் : 2017 ஜூலை 2.விபரங்களுக்கு: http://trb.tn.nic.in/PG2017/09052017/msg2.htm