தமிழக அரசில் 3935 காலியிடங்கள்
தமிழக அரசில் 'குரூப் - 4' பிரிவு காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது. வி.ஏ.ஓ., 215, ஜூனியர் அசிஸ்டென்ட் 1678, ஜூனியர் ஆர்.ஐ., 239, டைப்பிஸ்ட் 1102, ஸ்டெனோ டைப்பிஸ்ட் 368, உதவியாளர் 54, வனக்காப்பாளர் 112, வனக்கண்காணிப்பு 145 உட்பட மொத்தம் 3935 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / பட்டப்படிப்புகூடுதல் தகுதி: டைப்பிஸ்ட், ஸ்டெனோ பணிக்கு தமிழ், ஆங்கிலத்தில் சான்றிதழ் தேவை. வயது: பொது பிரிவினர் 18-32, 21- 32. மற்ற பிரிவினரில் பத்தாம்வகுப்புக்கு மேல் முடித்தவர்களுக்கு வயது உச்ச வரம்பு இல்லை. தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புதேர்வு மையம்: தமிழகம் முழுவதும்விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்பதிவுக்கட்டணம்: ரூ. 125தேர்வுக்கட்டணம்: ரூ. 100கடைசிநாள்: 24.5.2025விவரங்களுக்கு: tnpsc.gov.in