இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்கள்
மத்திய அரசின் கீழ் செயல்படும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அசிஸ்டென்ட் பிரிவில் டில்லி 66, மகாராஷ்டிரா 64, கர்நாடகா 47, தமிழகம் 37, கேரளா 37, ராஜஸ்தான் 27, ஆந்திரா 26 உட்பட மொத்தம் 500 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு. தாய்மொழியில் வாசிக்க, எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும். வயது: 21-30 (31.7.2025ன் படி) தேர்ச்சி முறை: இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு. தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், திருச்சி, தஞ்சாவூர், விருதுநகர். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100 கடைசிநாள்: 17.8.2025 விவரங்களுக்கு: orientalinsurance.org.in