உள்ளூர் செய்திகள்

நிலக்கரி நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணி

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மெடிக்கல் லேப் டெக்னீசியன் 25, கன்வேயர் பெல்ட் வல்கனைசர் 20 என மொத்தம் 45 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிளஸ் 2. லேப் டெக்னீசியன் பணிக்கு (உயிரியல் / தாவரவியல் & விலங்கியல்) வயது: 1.4.2007க்குள் பிறந்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பித்து, அதை பிரின்ட் எடுத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். பொது மேலாளர், கற்றல் மேம்பாட்டு மையம், என்.எல்.சி., இந்தியா நிறுவனம், வட்டம் - 20. நெய்வேலி - 607803 கடைசி நாள்: 14.8.2025 விவரங்களுக்கு: nlcindia.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !