உள்ளூர் செய்திகள்

பெட்ரோலிய நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வாய்ப்பு

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் என்பது பொதுத்துறை சார்ந்த இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் நிறுவனமாகும். பி.பி.சி.எல்., என்ற பெயரால் இது அறியப்படுகிறது. இந்த நிறுவனத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் காலியாக இருக்கும் 85 அப்ரென்டிஸ் காலியிடங்களை, நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பிரிவுகள்: பி.பி.சி.எல்., நிறுவனத்தின் மேற்கண்ட டெக்னீசியன் அப்ரென்டிஸ் பதவி என்பது கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், பயர் அண்டு சேப்டி, மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி, சிவில் ஆகிய பிரிவுகளில் உள்ளது.வயது: 01.08.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு உச்ச பட்ச வயதில் சலுகை உள்ளது.கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகள் ஏதாவது ஒன்றில் முடித்திருக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான படிவத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். முகவரி: DGM (ADMIN/T&D) MR, BPCL Mumbai Refinery Mahul, Mumbai - 400 074. முழுமையான தகவல்களை இணையதளத்தில் பார்க்கவும்.கடைசி நாள்: 2017 ஜூன் 6. விபரங்களுக்கு: https://drive.google.com/file/d/0B90tS9E-7te2aHhCNjFYNXFQMjg/view


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !