பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு ராணுவத்தில் வாய்ப்பு
பெங்களூருவில் உள்ள ராணுவ பயிற்சி மையம் (தெற்கு) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பயர்மேன் 40, டிரைவர் 9, டிரேட்ஸ்மேன் 8, கேட்டரிங் இன்ஸ்ட்ரக்டர் 3 உட்பட மொத்தம் 62 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / டிப்ளமோ வயது: 18-25 (4.9.2026ன் படி) தேர்ச்சி முறை: ஸ்கில் தேர்வு / எழுத்துத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். The Presiding Officer, Civilian Direct Recruitment Board, Civ CR, ASC Centre (South), Agram Post, Bangalore -- 560 007 கடைசிநாள்: 4.9.2026 விவரங்களுக்கு: indianarmy.nic.in