ஆவினில் சேர ஆசையா
தமிழகத்தின் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஆவின் நிறுவனத்தின் பங்கு போற்றுதலுக்குரியது. தமிழ் நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் குழுமத்தின் அங்கமான ஆவின் நிறுவனம் தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: மார்க்கெடிங் மேனேஜர் பிரிவில் 1ம், துணை மேலாளர் டெய்ரியிங் பிரிவில் 2ம், துணை மேலாளர் - டெய்ரி கெமிஸ்ட் பிரிவில் 1ம், துணை மேலாளர் - டெய்ரி பாக்டீரியாலஜிஸ்ட் பிரிவில் 1ம், சூபர்வைசர் பிரிவில் 6ம், சிவில் எக்சிக்யூடிவ் பிரிவில் 5ம், பிரைவேட் செக்ரட்டரி - கிரேடு 3 பிரிவில் 2ம் என 18 காலியிடங்கள் உள்ளன.வயது: விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயது உடையவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வி தகுதி மாறுபடுகிறது. முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.விண்ணப்பக் கட்டணம் 250 ரூபாய். முகவரி: Managing Director, The Tamilnadu Co-operative Milk Producers' Federation Limited, Aavin Illam, Madhavaram Milk Colony, Chennai 600 051.கடைசி நாள் : 2017 செப். 6விபரங்களுக்கு: www.aavinmilk.com/hrhoadd160817-1.html.