உள்ளூர் செய்திகள்

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உதவியாளர் வேலை

பொதுக் காப்பீட்டுத்துறையில் மிகவும் பிரபலமானதும், தமிழகத்தின் சென்னையை தலைமையகமாகக் கொண்டதுமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாகும். லாபகரமான சேவை, சிறந்த வாடிக்கையாளர் சேவை என்ற சிறப்புகளைக் கொண்ட யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 686 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு பொருத்தமான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது : யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். எந்த மாநிலத்தின் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கிறோமோ, அந்த மாநில மொழியில் பேசும், எழுதும் திறன் தேவைப்படும்.தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும். எழுத்துத் தேர்வு பிரிலிமினரி மற்றும் மெயின் என்ற இரண்டு நிலைகளாக நடத்தப்படும்.விண்ணப்பக் கட்டணம் : யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேற்கண்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ.500/-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்க : ஆன்லைன் முறையிலேயே இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.கடைசி நாள் : 2017, ஆக., 28விபரங்களுக்கு : www.uiic.co.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !