உள்ளூர் செய்திகள்

விளையாட்டு வீரர்கள் விமானப்படையில் சேரலாம்

நவீன தொழில் நுட்பம் மற்றும் சிறந்த போர்த்திறன் கொண்ட இந்திய விமானப்படை சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றது. இந்தப் படையில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பணி நியமனமாக குரூப் ஒய் டிரேடு பிரிவிலான காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விளையாட்டு பிரிவுகள் : அதாலடிக்ஸ், பேஸ்கட் பால், குத்துசண்டை, கிரிக்கெட், சைக்ளிங், கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், ஹாக்கி, கபாடி, லான் டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், நீச்சல், கைப்பந்து , மல்யுத்தம், பளுதுாக்குதல், கோல்ப் போன்ற விளையாட்டுகளில் சிறப்புத் தகுதி தேவை.வயது : விண்ணப்பதாரர்கள் 28.12.1996 முதல் 27.12.2000க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி : பிளஸ் 2 படிப்பை முடித்திருக்க வேண்டும்.இதர தகுதிகள் : பாதுகாப்புப் படை சார்ந்த பதவி என்பதால் இந்த இடங்களுக்கு சில குறைந்தபட்ச உடல் தகுதிகளும் தேவைப்படும். உயரம் குறைந்த பட்சம் 15.5 செ.மீ.,யும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். மார்பு விரிவது குறைந்தபட்சம் 5 செ.மீ., இருக்க வேண்டும். தேர்ச்சி முறை : உடல் தகுதி தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.விண்ணப்பிக்கும் முறை : பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.Secretary, Air Force Sports Control Board, C/O Air Force Station New Delhi, Race Course, New Delhi-110003 கடைசி நாள் : 2017 ஆக. 15.விபரங்களுக்கு : www.indianairforce.nic.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !