பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு கப்பல் படையில் பணி
இந்திய கப்பல் படைக்கான கப்பல்களைத் தயாரிப்பது தொடர்புடைய தொழிற்சாலை மும்பையில் உள்ளது. இது இந்தியன் நேவல் டாக்யார்டு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் டிரேட்ஸ்மேன் பிரிவிலான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிட விபரம்: நேவல் டாக்யார்டில் சிவிலியன் பணியிடமான டிரேட்ஸ்மேன் மேட் குரூப் சி காலியிடங்கள் 384 உள்ளன. இவை முன்னர் எம்.டி.எஸ்.,(இன்டஸ்ட்ரியல்/யூ.எஸ்.எல்.,) என்ற பெயரில் நிரப்பப்பட்டன.வயது: விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும்.தேர்ச்சி முறை: இந்தப் பதவிக்கு வரும் விண்ணப்பங்கள் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு, தகுதி உடையவர்களுக்கு எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு அனுப்பப்படும். எழுத்துத் தேர்வு, நேர்காணல், மருத்துவத் தகுதித் தேர்வு என்ற அடிப்படைகளில் தேர்ச்சி இருக்கும்.எழுத்துத் தேர்வு: ஜெனரல் இன்டலிஜென்ஸ் மற்றும் ரீசனிங்கில் 25, நியூமெரிக்கல் ஆப்டியூடில் 25, ஜெனரல் இங்கிலீஷில் 25, இங்கிலீஷ் அவேர்னசில் 25 சேர்த்து மொத்தம் 200 கேள்விகளுக்கு பதில் தர வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுடைய விண்ணப்பதாரர்கள் பாரதி சேவாவின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாள்: 2017 மே 20.விபரங்களுக்கு: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10702_23_1718b.pdf