உள்ளூர் செய்திகள்

புள்ளியியல் துறை மற்றும் திட்ட அமலாக்க பணியிடங்கள்

புள்ளியியல் துறை மற்றும் திட்ட அமலாக்கத் துறை இரண்டையும் ஒன்றிணைத்து 1999ல் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கப் பிரிவு எனப்படும் மினிஸ்ட்ரி ஆப் ஸ்டாடிஸ்டிக்ஸ் அண்டு புரொகிராம் இம்ப்ளிமென்டேஷன் அமைச்சகப்பிரிவு உருவாக்கப்பட்டது.இவற்றுள் புள்ளியியல் பிரிவில் நேஷனல் ஸ்டாடிஸ்டிக்ஸ் ஆபிஸ் (என்.எஸ்.ஓ.,), சென்ட்ரல் ஸ்டாடிஸ்டிகல் ஆபிஸ் (சி.எஸ்.ஓ.,), கம்ப்யூட்டர் சென்டர், நேஷனல் சாம்பிள் சர்வே ஆபிஸ் போன்றவை உள்ளடங்கியுள்ளன. இந்த அமைச்சகத்தில் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பீல்டு இன்வெஸ்டிகேடர்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிட விபரம் : மேற்கண்ட அமைச்சகத்தின் காலியிடமான பீல்டு இன்வெஸ்டிகேடர்ஸ் பதவியில் மொத்தம் 645 காலியிடங்கள் உள்ளன. இந்த இடங்கள் மைய வாரியாக நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் 40ம், கோவையில் 36ம் உள்ளிட்டு பல்வேறு மண்டலங்களில் மொத்தம் இந்த காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.வயது: 01.07.2015 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்த பட்டப் படிப்பில் புள்ளியியல், பொருளாதாரம், கணிதம் போன்ற ஏதாவது ஒரு பாடத்தை கட்டாயம் படித்திருக்க வேண்டும். இத்துடன் பணிபுரியும் இடத்தைப் பொறுத்த மொழியையும், ஆங்கில மொழியறிவும்பெற்றிருக்க வேண்டும். அதே போல் கம்ப்யூட்டர் தொடர்புடைய எம்.எஸ்., ஆபிஸ் திறனும், சாம்பிள் சர்வே செய்த அனுபவமும் பெற்றிருப்பது தேவைப்படும்.ஊதியம் எவ்வளவு?: தேர்ச்சி செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாதம் ரூ.16 ஆயிரத்து 500ஐ ஊதியமாகப் பெற முடியும்.தேர்ச்சி முறை: தகுதி அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, நேர்காணல் முறையில் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட தகுதி உடைய விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் மண்டலம் சார்ந்த என்.எஸ்.எஸ்.ஓ., அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியில் விண்ணப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.விண்ணப்பிக்க இறுதி நாள்: 19.06.2015இணையதள முகவரி:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்