ADDED : ஆக 27, 2012 | ADDED : ஆக 27, 2012
தமிழக அரசின் காலிப் பணி இடங்களை தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி., அமைப்பு தேர்வுகளை நடத்தி நிரப்புவது நாம் அறிந்ததுதான். தற்போது அக்ரிகல்சர் ஆபிசர் (எக்ஸ்டென்சன்) பணி இடங்கள் மொத்தம் ஆயிரத்து 460 காலி இடங்களை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி., யின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேவைகள்:
தமிழ் நாடு அரசுப் பணியாளர் பொதுத் தேர்வுக் குழுமத்தின் விவசாய அதிகாரி (விரிவாக்கம்) பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். விவசாயப் பிரிவில் பட்டப் படிப்பை அங்கீகரிக்கபட்ட ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். தமிழ் மொழியில் போதுமான திறமை பெற்றிருக்க வேண்டும். இந்தப் பதவிக்காக நடத்தப்படும் எழுத்துத் தேர்வை எதிர்கொண்டு வெற்றிகரமாக முடித்துத் தேர்ச்சி பெற வேண்டும். எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி ஆகிய மையங்களில் நடத்தப்படும்.
மற்றவை:
டி.என்.பி.எஸ்.சி.,யின் அக்ரிகல்சர் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.175/-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்திலிருந்து விலக்கு பெற தகுதி உடையவர்கள் ரூ.50/- மட்டும் செலுத்தினால் போதுமானது. ஒரே ஒரு முறை மட்டுமே பதிவு செய்து கொள்வதற்கான கட்டணமான ரூ.50/- செலுத்தும் விருப்பத்தையும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இப்படி பதிவு செய்வதன் மூலம் பதிவுக் கட்டணம் ஐந்து ஆண்டுகளுக்கு மதிப்பில் இருக்கும். இந்தப் பதவிக்கு ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களை இந்த குழுமத்தின் பின் வரும் இணையதளத்திலிருந்து அறியவும்.
விண்ணப்பங்களை அனுப்ப இறுதி நாள் :
12.09.2012
வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் கட்டணம் செலுத்த இறுதி நாள் :
14.09.2012
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் :
28.10.2012
இணையதள முகவரி :
www.tnpsc.gov.in/notifications/28_2012_not_eng_ag%28extn%292kt2.pdf