அஞ்சல் துறையில் பணியாற்ற வேண்டுமா
சேவைத் துறையில் புனிதமான துறையாக கருதப்படும் அஞ்சல் துறை பல ஆண்டுகள் பழமையானது. தற்போது கூரியர் போன்ற நிறுவனங்களின் வளர்ச்சியால் இத்துறையின் வளர்ச்சி கணிசமாக பாதிக்கப்பட்ட போதும், தன்னலமற்ற சேவையையே நோக்கமாகக் கொண்ட அஞ்சல் துறை இன்னமும் நம் அனைவரின் போற்றுதலுக்கு உரிய துறையாக உள்ளது. இத்துறையின் தமிழக வட்டத்தில் காலியாக உள்ள 128 'கிராமின் தக் சேவக்' காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது: விண்ணப்பதாரர்கள் 18-40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். கல்வித் தகுதி: பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.விண்ணப்பக் கட்டணம்: 100 ரூபாய். தேர்ச்சி முறை: இந்தப் பதவிக்கு வரும் விண்ணப்பங்கள் கம்ப்யூட்டர் முறையிலேயே பரிசீலிக்கப்பட்டு தேர்ச்சி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கடைசி நாள்: 2017 ஜூன் 5விபரங்களுக்கு: www.appost.in/gdsonline/Home.aspx