உள்ளூர் செய்திகள்

பெல் நிறுவனத்தில் இன்ஜினியர் பணி

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் பி.இ.எல்., என்ற பெயரால் பெரிதும் அறியப்படுகிறது. எலக்ட்ரானிக்ஸ் தொடர்புடைய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் கிளைகள் உள்ளன. ரேடார் முதல் சோலார் பேனல் வரை பல்வேறு பொருட்களின் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 66 புரொபேஷனரி இன்ஜினியரிங் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம்: எலக்ட்ரானிக்சில் 33, மெக்கானிக்கலில் 20, கம்ப்யூட்டர் சயின்ஸ்-ல் 10 மற்றும் சிவிலில் 3 இடங்கள் உள்ளன.வயது: 01.04.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பி.இ., அல்லது பி.டெக்., பட்டப் படிப்பை எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு டெலிகம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், டெலிகம்யூனிகேஷன், மெக்கானிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முடித்திருக்க வேண்டும். ஏ.எம்.ஐ.இ., ஏ.எம்.ஐ.இ., டி.,இ., முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். பி.எஸ்சி., இன்ஜினியரிங் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.பணியிட மையங்கள்: மேற்கண்ட பதவியைப் பெறும் பட்சத்தில் பெங்களூரு, காசியாபாத், புனே, சென்னை, ஐதராபாத், மசிலிப்பட்டினம், பஞ்ச்குலா, கோட்வாரா, நவி மும்பை ஆகிய ஏதாவது ஒரு மையத்தில் பணிபுரிய வேண்டியிருக்கும்.தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கும்.விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/-ஐ இந்தப் பதவிகளுக்கான விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். கடைசி நாள்: 2017 மே 11.விபரங்களுக்கு: http://www.bel-india.com/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !