மின்சக்தி நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் வேலை
மேகாலயாவில் உள்ள வடகிழக்கு மின்சக்தி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எக்சிகியூட்டிவ் பிரிவில் நிதி 12, சிவில் 9, மெடிக்கல் 5, செக்யூரிட்டி 4, எச்.ஆர்., 3, இ.ஆர்.பி., 2, உட்பட மொத்தம் 38 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / பட்டப்படிப்பு / எம்.பி.ஏ., / சி.ஏ., வயது: 18 - 30, 18 - 37 (1.1.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அனுபவம்: தொடர்புடைய பிரிவில் பணி அனுபவம் தேவை. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 13.7.2026 விவரங்களுக்கு: neepco.co.in