உள்ளூர் செய்திகள்

குருபார்வை

Ø இயற்பியலில் ஆர்வமுள்ள நான், வானியல் துறையில் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள விரும்புகிறேன். வாய்ப்புகள் எப்படி ? ரம்யா, சென்னை:அறிவியல் புலத்தில் நீங்கள் ஆர்வம் பெற்றிருப்பது தான், உங்களுக்கான எதிர்காலத்தை இந்தத் துறையில் பெற்றுத் தரும். பிளஸ் 2வில் இயற்பியல் படிப்பது உங்களுக்கான அடிப்படை தேவை. அதில் பட்டப்படிப்பையும் பட்ட மேற்படிப்பையும் படிக்க வேண்டும். எம்.எஸ்சி., முடித்தபின் நீங்கள் வானியல் துறையில் ஆய்வு மேற்கொள்ளலாம். Astronomy , Astrophysics, Atmospheric Science போன்ற பிரிவுகளில் இந்தத் துறையில் ஆய்வுகளும் பட்ட மேற்படிப்புகளும் உள்ளன. அமெரிக்கா மற்றும் கனடாவில் இந்தத் துறையில் மேற்படிப்புகளைத் தரும் பல சிறப்பான கல்வி நிறுவனங்கள் உள்ளன.Ø ஓட்டல் மேனேஜ் மென்ட் படிக்க விரும்புகிறேன். என்ன படித்திருந்தால் இதில் உள்ள பிரிவுகளில் சேரலாம்? ஸ்ரீரஞ்சனி, கடலுார்: ஓட்டல் மேனேஜ்மென்ட் பிரிவில் உள்ள படிப்புகளில் சேர நீங்கள் பொதுவாக பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். இதில் உள்ள சான்றிதழ், டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்புகளில் சேர பிளஸ் 2 படித்திருந்தால் போதும். சான்றிதழ் படிப்புகள் 6 மாதம் முதல் ஒரு ஆண்டு படிப்புகளாகத் தரப்படுகின்றன. பட்டப் படிப்புகள் 3 ஆண்டு, டிப்ளமோ படிப்புகள் குறைந்தது ஒன்றரை ஆண்டுப் படிப்புகளாகவும் தரப்படுகின்றன. பட்டப் படிப்புக்குப் பின் தரப்படும் பட்டய படிப்புகள் ஒரு ஆண்டுப் படிப்பாகத் தரப்படுகின்றன. இந்தப் படிப்புகளில் சேர அடிப்படையில் உங்களுக்கு ஆர்வம் இருப்பதுடன் சிறப்பான தகவல் தொடர்புத் திறனைப் பெற்றிருப்பது சிறப்பு. Ø எனது மகனை 10ம் வகுப்புக்குப் பின் இன்ஜினியரிங் டிப்ளமோவில் சேர்க்க விரும்புகிறேன். கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் மற்றும் கம்ப்யூட்டர் டெக்னாலஜி என்ன வித்தியாசம்? மணிகண்டன், பரமக்குடி: கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் 2 துறைகளையும் இணைத்து கம்ப்யூட்டர் ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் இரண்டையும் உருவாக்குவதை பற்றி படிப்பது கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிப்பு. இன்ஜினியரிங், அறிவியில் பூர்வமான கம்ப்யூட்டிங், கணித நுட்பங்கள் ஆகியவற்றை இணைத்து இந்தத் துறை பாடத் திட்டத்தை கொண்டுள்ளது. கம்ப்யூட்டர் டெக்னாலஜி படிப்பானது, நடப்பு ஆபரேட்டிங் சிஸ்டம், ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் பயிற்சி மற்றும் கம்ப்யூட்டர் ரிபயரிங் போன்றவற்றை உள்ளடக்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !