உள்ளூர் செய்திகள்

குருபார்வை

ஸ்டேட் வங்கியின் பி.ஓ., பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப் பட்டுள்ளேன். தற்போது பொது இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் சமீபத்தில் தான் கிளார்க் பணியில் சேர்ந்துள்ளேன். இப்படிப் பணிபுரிவதை நேர்முகத் தேர்வில் கூறலாமா? பொற்கைப்பாண்டியன், திருப்பூர்கட்டாயம் கூறலாம். தகவல்களை மறைப்பதை விட உண்மையை கூறலாம். எனினும் தற்போது நீங்கள் பணிபுரியும் நிறுவனம் உங்களுக்கு என்.ஓ.சி., எனப்படும் தடையில்லாச் சான்றிதழை தருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால் நீங்கள் ஸ்டேட் பாங்கின் பணிக்காகத் தேர்வு செய்யப்படும் போது என்.ஓ.சி., சமர்ப்பிப்பதாகக் கூறலாம். நேர்முகத் தேர்வில் தற்போது நீங்கள் பணிபுரியும் நிறுவனம் மற்றும் துறை தொடர்பான கேள்விகளை எதிர்பார்க்கலாம். பி.ஆர்க்., முடித்திருக்கும் எனது உறவினர் வளாகத்தேர்வு மூலமாக வேலை பெற முடியவில்லை. அவருக்கு படித்த துறையில் வேலை பார்க்கவே பிடிக்கவே இல்லை. அதனால் துறை தொடர்பான எந்த வேலைக்கும் போகவும் பிடிக்கவில்லை. உங்களது ஆலோசனை என்ன? சண்முகவேல், மதுரைஇது உங்களது உறவினருக்கு மட்டும் அல்ல. எண்ணற்ற இஞ்சினியரிங் பட்டதாரிகளுக்குமான நிலை தான் இது. ஆனால் ஒரு படிப்பை முடித்த பின்பு இப்படி குழப்பமான மன நிலையில் இருக்கக் கூடாது. ஒன்று அவரது துறை தொடர்பான வேலையை உடனடியாகப் பெற முயற்சிக்க வேண்டும். இல்லாத போது மாற்று வழிகளை யோசிக்க வேண்டும். உதாரணமாக போட்டித் தேர்வுகள் மூலமாக நல்லதொரு வேலையைப் பெரும் முயற்சிகளை துவங்க வேண்டும். இல்லாத போது வேகமாக கரையும் காலத்தில் தன்னம்பிக்கையை இழந்து எதிர்காலத்தில் ஒரு வேலையைப் பெற முடியாத சங்கடங்களை சந்திக்க நேரும். உடனடியாக முடிவெடுத்து முயற்சிகளை துவங்கச் சொல்லுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !