இந்திய கப்பல் படையில் சேர விருப்பமா...
இந்திய கப்பல் படையில் பி.டெக்., படிப்புடன் கூடிய பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 44 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், கணிதத்தில் குறைந்தது 70% மதிப்பெண். வயது: 2.1.2007 - 1.1.2009க்குள் பிறந்திருக்க வேண்டும். பணி வாய்ப்பு: நான்காண்டு பி.டெக்., படிப்புக்குப்பின், 'பெர்மன்ட் கமிஷன்ட் ஆபிசராக' பணியமர்த்தப்படுவர். தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, 'ஜே.இ.இ., - 2025' நுழைவுத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 19.1.2026 விவரங்களுக்கு: joinindiannavy.gov.in