உள்ளூர் செய்திகள்

நியூஸ்பிரின்ட் நிறுவனத்தில் பயிற்சியாளர்கள்

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தின் வெள்ளூரில் இந்துஸ்தான் நியூஸ்பிரின்ட் லிமிடெட் நிறுவனம் அமைந்துள்ளது. மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத் துறை நிறுவனமான இந்துஸ்தான் நியூஸ்பிரின்ட் நிறுவனம் 1983ல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தில் அப்ரென்டிஸ் டிரெய்னி பிரிவில் தற்போது காலியாக உள்ள 20 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள் : சிவில் இன்ஜினியரிங்கில் 2, மெக்கானிக்கலில் 3, இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜியில் 2, எலக்ட்ரிக்கலில் 3, கெமிக்கலில் 4, கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்கில் 1, உட் அண்டு பேப்பர் டெக்னாலஜியில் 3, டிப்ளமோ இன் கமர்சியல் பிராக்டிசில் 2ம் சேர்த்து மொத்தம் 20 இடங்கள் உள்ளன.தேவைகள் : தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., அல்லது டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். சரியான தகவல்களைப் பெற இணையதளத்தைப் பார்க்கவும்.தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.விண்ணப்பிக்கும் முறை : முதலில் இணையதளத்திற்கு சென்று முழுமையான தகவல்களை அறியவும். அதன் பின்னர் தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் பின்வரும் முகவரிக்கு நேரடியாக் நேர்காணலுக்கு செல்லவும்.Govt. polytechnic college, HMT Junction, Kalamassery, on 19th August 2017 (Saturday) between 9.00 am to 01.00 pm.கடைசி நாள் : 2017 ஆக., 19.விபரங்களுக்கு : www.hnlonline.com/php/list_career.php?lid=18>


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !