உள்ளூர் செய்திகள்

வங்கியில் ஐ.டி., அதிகாரி பணி

தனியார் துறை வங்கியான சவுத் இந்தியன் வங்கி, கேரளாவின் திருச்சூரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது. இவ்வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. நவீனமய வங்கிச் சேவைகளுக்கும், சிறந்த வாடிக்கையாளர் சேவைக்கும் பெயர் பெற்ற இவ்வங்கியில் ஐ.டி., அதிகாரிகள் பிரிவில் 15 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.வயது: விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 31.12.2016 அடிப்படையில் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி : பி.இ., அல்லது பி.டெக்., படிப்பைக் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முடித்திருக்க வேண்டும். எம்.சி.ஏ., / எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.எஸ்சி., ஐ.டி., ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்களும் இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.முன் அனுபவம்: அப்ளிகேஷன் சாப்ட்வேர் டெவலப்மென்ட், புராெஜக்ட் மேனேஜ்மெண்ட் பிரிவுகளில் குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் தேவைப்படும்.தேர்ச்சி முறை: இந்த இடங்களுக்கு வரும் விண்ணப்பங்கள் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு, எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் குழுவிவாதம் மற்றும் நேர்காணல் போன்ற நிலைகளை வெற்றிகரமாகக் கடந்து பணி நியமனம் பெற வேண்டும்.விண்ணப்பக் கட்டணம்: முதலில் விண்ணப்பங்களைப் பதிவு செய்துவிட்டு அதன் பின்னர் ஏதாவது ஒரு சவுத் இந்தியன் வங்கிக் கிளைக்கு சென்று சலான் முறையில் ரூ.700/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். கடைசி நாள் : 2017 மார்ச் 31.விபரங்களுக்கு: www.southindianbank.com/Careers/careersdetails.aspx?careerid=153


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !