உள்ளூர் செய்திகள்

பட்டப்படிப்பு முடித்தவருக்கு பணி

பொதுத்துறை வங்கியான 'பேங்க் ஆப் இந்தியா', காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 'கிரடிட் ஆபிசர்' பிரிவில் மொத்தம் 779 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு / எம்.பி.ஏ., / சி.ஏ., வயது: 25-45 (1.6.2026ன் படி) அனுபவம்: தொடர்புடைய பிரிவில் குறைந்தது மூன்றாண்டு பணி அனுபவம் அவசியம். தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175 கடைசிநாள்: 20.7.2026 விவரங்களுக்கு: bankofindia.bank.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !