உள்ளூர் செய்திகள்

யூகோ வங்கியில் 530 ‘அப்ரென்டிஸ்’ பணியிடங்கள்

பொதுத்துறையை சேர்ந்த ‘யூகோ’ வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் மேற்கு வங்கம் 86, உ.பி., 45, ஒடிசா 41, ராஜஸ்தான் 37, பீஹார் 34, தமிழகம் 21 உட்பட மொத்தம் 530 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : பட்டப்படிப்பு வயது : 20 – 28 (1.10.2026ன் படி) ஸ்டைபண்டு : மாதம் ரூ. 16,650 தேர்ச்சி முறை : ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம் : ரூ. 800. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200 கடைசிநாள் : 29.10.2026 விவரங்களுக்கு : uco.bank.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்