பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் வேலை
மத்திய அரசின் கீழ் செயல்படும் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் டெலிகாம் ஆபிசர் (டெலிகாம்) பிரிவில் கர்நாடகா 26, மஹாராஷ்டிரா 16, கேரளா 15, ம.பி., 10, சென்னை 5, தமிழகம் 1, ஒடிசா 6 உட்பட மொத்தம் 100 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ.,/பி.டெக்.,/ எம்.எஸ்சி., வயது: 20-30 (3.7.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. தேர்வு மையம்: சென்னை விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 2000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 1000 கடைசிநாள்: 3.7.2026 விவரங்களுக்கு: externalexam.bsnl.co.in