தெற்கு ரயில்வேயில் நர்சிங் படித்தவர்களுக்கு வேலை
இந்தியாவின் போக்குவரத்து தொடர்புடைய சேவைகளில் ரயில்வே துறையின் சேவை மிகவும் போற்றத்தக்கது. இந்திய ரயில்வே பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நாட்டின் பல்வேறு பிரிவுகளில் அளப்பரிய சேவை செய்து வருகிறது. போற்றுதலுக்குரிய இந்திய ரயில்வேயில் தெற்கு ரயில்வேயில் தற்சமயம் காலியாக உள்ள 14 நர்சிங் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.வயது: விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட நர்சிங் பயிற்சிப் பள்ளியின் மூலமாக நர்சிங் அண்டு மிட்வைபரி பிரிவில் மூன்று வருட படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது பி.எஸ்சி., நர்சிங் படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான படிவத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். Assistant Personnel Officer/Engg, Southern Railway, Park Town, Chennai 600 003கடைசி நாள்: 05.05.2017விபரங்களுக்கு: http://www.indgovtjobs.in/2015/01/southern-railway-recruitment-2015.html#ixzz4fiTA5AlI.