உள்ளூர் செய்திகள்

வருமான வரித்துறையில் வேலை

வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் சீனியர் தனி செயலர் 15, தனி செயலர் 20 என மொத்தம் 35 காலியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கூடுதல் தகுதி: ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 120 வார்த்தை தட்டச்சு செய்ய வேண்டும். வயது: 35க்குள் (16.12.2024ன் படி)தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு.தேர்வு மையம்: சென்னைவிண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். The Deputy Registrar, Income Tax Appellate Tribunal, Pratishtha Bhavan, Old Central Govt. Offices Building, Fourth floor, 101, Maharshi Karve Marg, Mumbai - --- 400 020.கடைசிநாள்: 16.12.2024விவரங்களுக்கு: itat.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !