உள்ளூர் செய்திகள்

எம்.காம்., படித்தவர்கள் ரயில்டெல் நிறுவனத்தில் சேரலாம்

ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் என்பது ஒரு மினிரத்னா நிறுவனமாகும். இந்திய ரயில்வேக்கு சொந்தமான பாதைகள் அனைத்திலும் பைபர் ஆப்டிக் கேபிள்களைப் பதிப்பதன் மூலம் தொலைத்தொடர்பில் புரட்சிக்கு வித்திடும் பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தற்சமயம் காலியாக இருக்கும் அசிஸ்டென்ட் சூப்பர்வைசர் (அக்கவுண்ட்ஸ்) பிரிவிலான இடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன.காலியிட விபரம் : ரயில்டெல் நிறுவனத்தில் 20 இடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன.வயது : விண்ணப்பதாரர்கள் 21 முதல் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி : எம்.காம்., படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சி.ஏ., அல்லது ஐ.சி.டபிள்யூ.ஏ., முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். படிப்பை முடித்துவிட்டு குறைந்த பட்சம் 2 வருட பணி அனுபவம் தேவைப்படும்.விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் 300 ரூபாய். தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.கடைசி நாள் : 2017 ஜூலை 17.விபரங்களுக்கு : www.railtelindia.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !