விவசாயப் பல்கலையில் மருத்துவ பணிவாய்ப்பு
தமிழகத்தின் கோவையில் உள்ள விவசாயப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள மருத்துவர் மற்றும் நர்ஸ் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: மெடிக்கல் ஆபிசர் பிரிவில் 8 இடங்களும், ஸ்டாப் நர்ஸ் பிரிவில் 5 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.வயது : மெடிக்கல் ஆபிசர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 57 வயதுக்கு உட்பட்டவராகவும், நர்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 58 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.தேவைகள் : மெடிக்கல் ஆபிசர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்.பி.பி.எஸ்., முடித்திருப்பதோடு மெடிக்கல் கவுன்சிலிலும் பதிவு செய்திருக்க வேண்டும். நர்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் நர்ஸ் டிகிரி அல்லது டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். நர்ஸ் கவுன்சிலில் பதிவும் செய்திருக்க வேண்டும். இரண்டு வருட பணிஅனுபவமும், ஆப்ஸ்டட்ரிக்ஸ் மற்றும் கைனகாலஜி பிரிவுகளில் பணியாற்றிய முன் அனுபவமும் தேவைப்படும்.தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கலாம் என்று தெரிகிறது.விண்ணப்பிக்கும் முறை: பின்வரும் முகவரிக்கு பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை உரிய இணைப்புகளுடன் அனுப்ப வேண்டும். விண்ணப்பக் கட்டணம் 750 ரூபாய். Office of the Registrar, Tamil Nadu Agricultural University, Coimbatore - 641 003கடைசி நாள் : 2017 ஜூலை 31.விபரங்களுக்கு : www.tnau.ac.in