என்.ஐ.டி., கல்லூரியில் இன்ஜினியர்களுக்கு வாய்ப்பு
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (என்.ஐ.டி.,) கல்வி நிறுவனம் தமிழகத்தில் திருச்சியில் மட்டுமே உள்ளது. முன்பு ரீஜனல் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. கல்வித் துறையில் பிரசித்தி பெற்ற இந்த நிறுவனத்தில் சப்போர்ட் டிரெய்னி பிரிவில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பிரிவுகள்: சப்போர்ட் டிரெய்னி பணியிடங்கள் நெட்வொர்க், ஹார்டுவேர், சாப்ட்வேர், இ-மெயில், வெப் ஆகிய பிரிவுகளின் கீழ் நிரப்பப்பட உள்ளன.தேவைகள்: பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முதல் வகுப்பில் முடித்திருக்க வேண்டும்.தேர்ச்சி முறை: ஆன்லைன் முறையிலான எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.கடைசி நாள்: 2017 செப்., 11விபரங்களுக்கு: www.nitt.edu/home/other/jobs