உள்ளூர் செய்திகள்

ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரி வாய்ப்பு

இன்சூரன்ஸ் எனப்படும் காப்பீடு பொதுவாக ஆயுள் காப்பீடு மற்றும் பொதுக்காப்பீடு என்ற இரண்டு பிரிவுகளாக உள்ளது. இவற்றில் உயிர் தொடர்பில்லாத தீ, திருட்டு, மரைன் உள்ளிட்ட காப்பீடுகளை செய்யும் நிறுவனங்களை பொதுக்காப்பீட்டு நிறுவனம் என்று கூறுகிறோம். இந்தியாவிலுள்ள பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் பொதுத்துறை சார்ந்த ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் முக்கியமானது. இந்த நிறுவனத்திற்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளது. இந்த நிறுவனத்தில் தற்சமயம் நிர்வாக அதிகாரிகள் பிரிவில் காலியாக உள்ள 300 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம் : ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் பதவி ஸ்பெஷலிஸ்ட் மற்றும் ஜெனரலிஸ்ட் என்ற இரண்டு பிரிவுகளாக உள்ளது. இவற்றில் ஜெனரலிஸ்ட் பிரிவில் 223 இடங்களும், ஸ்பெஷலிஸ்ட் பிரிவில் எஞ்சிய இடங்களும் உள்ளன. ஸ்பெஷலிஸ்ட் பிரிவில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் 20ம், ஆக்சுவரிஸ் பிரிவில் 2ம், ஆட்டோமொபைல் இன்ஜினியர் பிரிவில் 15ம், மெடிக்கல் ஆபிசரில் 10ம் உள்ளன.வயது : ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 31.07.2017 அடிப்படையில் 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி : ஜெனரலிஸ்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஸ்பெஷலிஸ்ட் பதவிக்கு விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடுகிறது. அக்கவுண்ட்ஸ் பிரிவுக்கு எம்.காம்., சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., எம்.பி.ஏ., பைனான்ஸ் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆக்சுவரிஸ் பதவிக்கு ஆக்சுவரியல் படிப்பில் 4 தாள்களை முடித்தவர்களும், 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படிப்பில் பி.இ., அல்லது பி.டெக்., முடித்தவர்கள் இன்ஜினியர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மெடிக்கல் ஆபிசர் பதவிக்கு எம்.பி.பி.எஸ்., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி முறை : ஜெனரலிஸ்ட் மற்றும் ஸ்பெஷலிஸ்ட் என்ற இரண்டு பதவிகளுக்குமே எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும். எழுத்துத் தேர்வு பிரிலிமினரி மற்றும் மெயின் என்ற இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.விண்ணப்பக் கட்டணம் : ரூ.600/-ஐ இந்தப் பதவிக்கான விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.தேர்வு மையங்கள் : தமிழ் நாட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய மூன்று மையங்களில் நடத்தப்படும்.விண்ணப்பிக்க : ஓரியண்டல் இன்சூரன்சின் மேற்கண்ட பதவிகளுக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.கடைசி நாள் : 20017 செப்., 15விபரங்களுக்கு : www.orientalinsurance.org.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !