உள்ளூர் செய்திகள்

ஐ.டி.ஐ., முடித்தவருக்கு ஆப்பரேட்டர் வாய்ப்பு

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் (பி.இ.எம்.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'ஆப்பரேட்டர்' பிரிவில் பிட்டர் 127, டர்னர் 93, எலக்ட்ரீசியன் 58, வெல்டர் 44, மெஷினிஸ்ட் 40 என மொத்தம் 362 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., வயது: 18-29 (10.7.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 10.7.2026 விவரங்களுக்கு:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !