தேசிய உணவு கழகத்தில் வாய்ப்பு
புட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற இந்திய உணவுக் கழகம் பொதுத் துறையில் இயங்கும் மிகப் பெரிய நிறுவனம். இது உணவு தானிய மேலாண்மைக்குப் பெயர் பெற்றது. இந்த நிறுவனத்தின் கேரளா மண்டலத்தில் காலியாக உள்ள 127 வாட்ச்மேன் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.தகுதி: எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். வயது: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு மற்றும் உடல்தகுதி தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.கடைசி தேதி : 2017 ஜூலை 15. விண்ணப்பக்கட்டணம் 250 ரூபாய். விபரங்களுக்கு: https://efreejobalert.in/wp-content/uploads/2017/06/FCI-Watchman-Notification-2017.pdf