குரூப் 1 அதிகாரி வாய்ப்பு
தமிழக அரசில் 'குரூப் 1' பணிக்கு தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. துணை கலெக்டர் 12, மாவட்ட பதிவாளர் 8, கூட்டுறவு சங்க துணை பதிவாளர் 3, அசிஸ்டென்ட் கமிஷனர் (வணிகவரி) 2, தொழிலாளர் துறை அசிஸ்டென்ட் கமிஷனர் 1 என மொத்தம் 26 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு வயது: பொது பிரிவு 18 - 35, மற்றவை 18-40 (1.7.2026ன் படி) தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் பதிவுக்கட்டணம்: ரூ. 150 தேர்வுக்கட்டணம்: ரூ. 100 கடைசிநாள்: 29.7.2026 விவரங்களுக்கு: tnpsc.gov.in