உள்ளூர் செய்திகள்

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வாய்ப்பு

இந்தியாவிலுள்ள வர்த்தக நிறுவனங்களில் மிகவும் பிரம்மாண்ட மானது என்ற பெயர் பெற்றதுதான் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் ஐ.ஓ.சி.எல்., நிறுவனமாகும். உலக அளவில் இது 96 இடத்தில் உள்ளது. எரிசக்தி தொடர்புடைய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் பிரிவில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிட விபரம் : புரொடக்சன் பிரிவில் 30, பவர் அண்டு யூடிலிடிஸ் பிரிவில் 9, எலக்ட்ரிகலில் 6, மெக்கானிக்கலில் 15, இன்ஸ்ட்ரூமென்டேஷனில் 3, பயர் அண்டு சேப்டியில் 3, மெட்டீரியல்ஸ் அசிஸ்டென்ட் பிரிவில் 4, குவாலிடி கன்ட்ரோல்ஸ் பிரிவில் 4 சேர்த்து மொத்தம் 74 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.கல்வித் தகுதி: ஜூனியர் இன்ஜினியரிங் பிரிவுகளுக்கு மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பு அல்லது பி.எஸ்சி., படிப்பு தேவைப்படும். தொடர்புடைய பிரிவில் இன்ஜினியரிங் படிப்பு மற்றும் பிரிவைப் பொறுத்து முன் அனுபவமும் தேவைப்படும். எனவே முழுமையான தகவல்களை இந்த நிறுவனத்தின் இணையதளத்தினைப் பார்த்து அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்கவும்.தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். விண்ணப்பிக்க ஐ.ஓ.சி.எல்., நிறுவனத்தின் மேற்கண்ட காலியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.எழுத்துத் தேர்வு நாள்: 2017 ஜூலை 2. விண்ணப்பிக்க கடைசி நாள்: 2017 மே 29.விபரங்களுக்கு : www.iocl.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !