உள்ளூர் செய்திகள்

அழைக்கிறது பாதுகாப்பு படை

மத்திய ஆயுத போலீஸ் படையில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. 'அசிஸ்டென்ட் கமாண்டன்ட்' பதவியில் எல்லை பாதுகாப்பு படை 108, மத்திய ரிசர்வ் போலீஸ் 106, இந்தோ - திபெத் எல்லை போலீஸ் 12, எஸ்.எஸ்.பி., 53, மத்திய தொழில் பாதுகாப்பு 70 என மொத்தம் 349 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு வயது: 20-25 (1.7.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத்தேர்வு தேர்வு மையம்: சென்னை, மதுரை விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 12.3.2026 விவரங்களுக்கு: upsc.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !