ராணுவத்தில் எஸ்.ஐ., பணி
பாதுகாப்பு துறையில் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 'சப் இன்ஸ்பெக்டர்' பதவியில் டில்லி போலீஸ் 317, மத்திய தொழில் பாதுகாப்பு படை 1320, தீயணைப்பு 234 என மொத்தம் 1871 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு வயது: தீயணைப்பு 18 - 30, மற்றவை 20-25 (1.8.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, வேலுார், திருநெல்வேலி, கிருஷ்ணகிரி விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசி நாள்: 30.9.2026 விவரங்களுக்கு: ssc.gov.in