விவசாயம் படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை
தமிழக அரசின் காலியிடங்களை டி.என்.பி.எஸ்.சி., எனப்படும் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அமைப்பு பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருவது நாம் அறிந்ததே! இந்த அமைப்பின் சார்பாக தற்சமயம் காலியாக இருக்கும் 21 அசிஸ்டன்ட் இன்ஜினியர் (அக்ரிகல்சர்) இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எஸ்.சி., எஸ்.சி.(ஏ) மற்றும் எஸ்.டி., பிரிவினர் மட்டும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். வயது : விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்ச 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்ச வயது கட்டுப்பாடு இல்லை. கல்வித் தகுதி : பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை அக்ரிகல்சர், அக்ரிகல்சர் இன்ஜினியரிங், மெக்கானிக்கல், சிவில், ஆட்டோமொபைல், புரொடக்சன், இன்டஸ்ட்ரியல் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முடித்தவர்களும், பி.எஸ்.சி., அக்ரிகல்சர் இன்ஜினியரிங் பிரிவில் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.தேர்ச்சி முறை : பொது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ச்சி இருக்கும். தேர்வு மையங்கள் : சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய மையங்களில் நடைபெறும்.விண்ணப்பிக்கும் முறை : தகுதியான விண்ணப்பிக்க விரும்புவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் 150 ரூபாய். கடைசி நாள் : 2017 ஆக. 2.விபரங்களுக்கு : www.tnpsc.gov.in