உள்ளூர் செய்திகள்

இன்ஜினியரிங் நிறுவனத்தில் டெக்னீசியன் வாய்ப்பு

மத்திய மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெக்னீசியன் பிரிவில் பிட்டர் 14, எலக்ட்ரீசியன் 4, மெக்கானிக் 4, மெஷினிஸ்ட் 2, ஏ.சி., 1 உட்பட மொத்தம் 27 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ., வயது: 18-28 (3.8.2026ன் படி) தேர்ச்சி முறை: டிரேடு தேர்வு, எழுத்துத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 3.8.2026 விவரங்களுக்கு: cmeri.res.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !