உள்ளூர் செய்திகள்

அழைக்கிறது ஆய்வு மையம்

தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'டெக்னீசியன்' பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 10, எலக்ட்ரிக்கல் 5, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 2, மல்டிமீடியா, அனிமேஷன் 1, போட்டோகிராபர் 1, மெக்கானிக் 1 என மொத்தம் 20 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ., வயது: 18-28 (30.6.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். The Senior Controller of Administration, CSIR- National Physical Laboratory, Dr. K.S. Krishnan Marg, New Delhi - -110 012 விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 30.6.2026 விவரங்களுக்கு: nplindia.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்