உள்ளூர் செய்திகள்

ரயில்டெல் நிறுவனத்தில் காலியிடங்கள்

ரயில்டெல் என்பது பொதுத் துறை சார்ந்த பெரிய தொலைத் தொடர்பு நிறுவனம். பைபர் ஆப்டிக் கேபிள்களை இந்திய ரயில்வேக்கு தொடர்புடைய அனைத்து தடங்களிலும் கொண்டிருப்பதன் மூலம் இந்த நிறுவனம் தகவல் தொழில்நுட்ப துறையில் புரட்சி செய்துள்ளது. பெருமைக்குரிய இந்த நிறுவனத்தில் டெக்னிகல் கன்சல்டன்ட்/டிரெய்னிங் மேனேஜர் பிரிவுகளில் 27 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிட விபரம்: டெக்னிக்கல் கன்சல்டன்ட் பிரிவில் 25 இடங்களும், டிரெய்னிங் மேனேஜர் பிரிவில் 2 இடங்களும் சேர்த்து மொத்தம் 27 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.வயது: 21 - 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: டெக்னிகல் கன்சல்டன்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.இ., அல்லது பி.டெக்., அல்லது மூன்று வருட டிப்ளமோ படிப்பை எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், டெலிகம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு எலக்ட்ரிகல் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முடித்திருக்க வேண்டும். பி.எஸ்.சி., எம்.சி.ஏ., படிப்புகளை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். டிரெய்னிங் மேனேஜர் பிரிவுக்கு பட்டப் படிப்பு தேவைப்படும்.தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்ச்சி இருக்கும்.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.கடைசி நாள்: 2017 ஆக., 22. விபரங்களுக்கு: www.railtelindia.com/careers.html


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !