தமிழக அரசில் 90 குரூப் - 1 காலியிடங்கள்
தமிழக அரசில் 'குரூப் - 1' பதவியில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.சப் கலெக்டர் 16, போலீஸ் டி.எஸ்.பி., 23, வணிக வரி உதவி கமிஷனர் 14, கூட்டுறவு சங்க துணை பதிவாளர் 21, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் 14. மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 1, மாவட்ட தீயணைப்பு, மீட்பு அதிகாரி 1 என 90 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: பெரும்பாலான பதவிகளுக்கு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.வயது: 1.7.2024 அடிப்படையில் 21 - 34 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வுவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.கட்டணம்: மெயின் எழுத்துத்தேர்வு ரூ. 200. பிரிலிமினரி ரூ. 100கடைசிநாள்: 27.4.2024விவரங்களுக்கு: apply.tnpscexams.in