இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி
புகழ் பெற்ற மத்திய அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பல்வேறு ஆலைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் விபரங்கள் இங்கே தரப்படுகின்றன. டிரேட் அப்ரெண்டிஸ் அட்டெண்டன்ட் ஆபரேட்டர்காலியிடங்கள்: 20, பிரிவு: கெமிக்கல்தகுதி: இயற்பியல், வேதியியல் மற்றும் இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி இவற்றில் ஒன்றில் பி.எஸ்சி., தகுதி பெற்றிருக்க வேண்டும்.லேபரேட்டரி அசிஸ்டண்ட்காலியிடங்கள்: 10பிரிவு: குவாலிட்டி கண்ட்ரோல்தகுதி: இயற்பியல், வேதியியல் மற்றும் இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி இவற்றில் ஒன்றில் பி.எஸ்சி., தகுதி பெற்றிருக்க வேண்டும்.உதவித் தொகை: இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு 6970 முதல் 7220 வரை மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும். இது இரண்டு ஆண்டுகளுக்கான உதவித் தொகை. பின் இது உயர்த்தப்படும்.வயது தகுதி: 18 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு வழக்கமான வயது வரம்பு தளர்வு தரப்படும்.தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவீர்கள்.விண்ணப்பிக்கும் முறை: இரண்டில் ஒரு பணிக்கு மட்டுமே ஒருவர் விண்ணப்பிக்க வேண்டும். தரப்பட்டுள்ள இணையதள முகவரியில் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து விண்ணப்பிக்க வேண்டும். முழு விபரங்களையும் தளத்தில் பார்த்துக்கொள்ளலாம்.விண்ணப்பிக்கும் முகவரி: Chief Human Resource Manager, Indian Oil Corporation Limited (AOD),DIGBOI-786 171.