அணு மின்சக்தி நிறுவனத்தில் வேலை
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் என்பது சுருக்கமாக என்.பி.சி.ஐ.எல்., என அழைக்கபடுகிறது. அணு சக்தியைப் பயன்படுத்தி மின்சக்தியை உற்பத்தி செய்வதில் பிரசித்தி பெற்றது. நாட்டின் பல பகுதிகளில் இதன் கிளைகள் உள்ளன. தற்சமயம் என்.பி.சி.ஐ.எல்., நிறுவனத்தின் குஜராத்தில் காலியாக உள்ள 40 டெக்னிகல் பிரிவு இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிட விபரம் : பிட்டரில் 9, டர்னரில் 3, மெஷினிஸ்டில் 1, எலக்ட்ரீசியனில் 9, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்கில் 2, எலக்ட்ரானிக் மெக்கானிக்கில் 3, பாசாவில் 9, வெல்டரில் 2ம் சேர்த்து மொத்தம் 40 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.தேவை : தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பை முடித்திருக்க வேண்டும்.வயது : விண்ணப்பதாரர்கள் 16 முதல் 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.கடைசி நாள் : 2017 ஆக., 16. விபரங்களுக்கு : www.freshersworld.com/jobs/apprentices-jobs-in-surat-npcil-324948