மதுரையில் நெல் சாகுபடியில் குழப்பமான சூழ்நிலை
தமிழகத்தில் நெல் உற்பத்திக்கு கை கொடுத்து உதவுவதற்கு மதுரை மாவட்டமும் ஒன்றாகும். பெரியார், வைகை பாசன திட்டங்களில் கணிசமான அளவிற்கு நெல் உற்பத்தி ஆகின்றது. பருவமழை சரியாக பெய்யாததால் இந்த வருடம் நெல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு குழப்பமான சூழ்நிலையில் திடீரென்று மழை பெய்தது. அதனால் நவம்பரில் நெல் சாகுபடி துவங்கிவிட்டது. இம்மாதிரியான சூழ்நிலைகளில் ஒரு நெல் கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் 100நாள் நெல் ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளனர். அதுதான் ஜே-13 என்ற ரகமாகும். இதன் சரித்திரம் யாதெனில் மதுரை, திண்டுக்கல், காந்திகிராமம் போன்ற இடங்களில் நல்ல மகசூலினைக் கொடுத்துள்ளது. ஜே-13 நெல்லினை குச்சி நெல் என்றும் சொல்வார்கள். தமிழகத்தில் ஜே-13 அரிசியை இட்லி செய்ய மாவு காணுகின்றது. மேலும் ஜே-13 நெல் பொரியை செய்வதற்கும் உபயோகப்படுத்தப்படுகின்றது. கீழ்பவானி பாசனப்பகுதியிலும் குறிப்பாக கோபி பகுதியிலும் பாசனப் பகுதியில் நூறு நாள் நெல்லாகிய ஜே-13 சாகுபடி செய்யப் படுகின்றது. இப்போது மதுரையில் ஜே-13 ரகம் நவம்பர் மாதத் தில் நாற்றுவிட்டு நடுவதற்கு ஏற்றதாக அமைந்துள் ளது. விவசாயிகள் நெல்லினை நாற்று நடுபவர்கள் நாற்றைப் பறித்து நடவு செய்வதிலும், ஊறப்போட்ட நெல்லினை நேரிடையாக விதைப்பதும் உண்டு. களிமண் பகுதி உள்ள இடங்களிலும் சாகுபடி செய்ய வேண்டிய நிர்ப்பந்தமும் உள்ளது. களிமண் நிலங்களில் சேறு கலக்கும் பிரச்னை உள்ளது. இதனை மாட்டு ஏர் கொண்டு கலக்க முடியாது. இயந்திர சாகுபடி வல்லுனர் முனியாண்டி (94458 68011) ரோட்டவேட்டர் கருவியை உபயோகிக்க வேண்டும் என்கிறார். பிரச்னை உள்ள பகுதிகளிலெல்லாம் கருவியை உபயோகிக்காமல் போய் விடும் என்று கூறி விவசாயிகளை சீராக செய்ய வேண்டிய பணியை களிமண் பகுதியில் செய்ய வேண்டும் என்கிறார். பல விவசாயிகள் ரோட்டவேட்டர் உபயோகத்தால் பயன் அடைந்து உள்ளனர். விவசாயிகள் ஜே-13 ரகத்தை நவம்பர் மாதத்தில் சாகுபடி செய்தால் பிப்ரவரி மாதத்தில் அறுவடை செய்யலாம். ஏக்கரில் 36 மூடையும் கணிசமான வைக்கோலும் கிடைக்கும். இதனை அறுவடை செய்த நிலத்தில் கர்நாடகா பொன்னி நெல்லினை (120 நாட்கள்) சாகுபடி செய்து கணிசமான அளவு மகசூலும் லாபமும் கிடைக்கும். மேற்கண்ட கருத்துக்களை நன்கு தெரிந்தபிறகு விவசாயிகள் துணிச்சலாக கட்டுரையில் விளக்கப்பட்ட சாகுபடி பணிகளைக் கடைப்பிடித்து மிகப் பெரிய அபாயத்திலிருந்து தப்பமுடியும்.