உள்ளூர் செய்திகள்

வறட்சியிலும் வளம் தரும் சந்தன மரம்

சந்தன மரங்களை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் சுதந்திரமாக வளர்க்க அரசின் அனுமதி உண்டு. அரசுக்கு சொந்தமான நிலங்களில் வனப்பகுதிகளில் வளரும் சந்தன மரங்களை வெட்டி கடத்துவோர் கண்டிக்கப்படுகின்றனர், தண்டிக்கப்படுகின்றனர். சந்தன மரங்களை வளர்ப்பவர்களை அரசு ஒருபோதும் தண்டிக்கப்படுவதில்லை.வீடுகள், விவசாய நிலங்கள், பள்ளி, கல்லூரி, தொழிற்சாலை வளாகங்கள் என தனியார் பட்டா நிலங்களில் வளர்க்கப்படும் சந்தன மரங்களை அறுவடை செய்திட வனத்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும். வனத்துறையினரே அறுவடை செய்து அருகில் உள்ள வனத்துறையின் சந்தன மரக்கிடங்கில் இருப்பு வைக்கப்படும். மர உரிமையாளருக்கு சந்தன மரக்கட்டைகளின் எடை குறிப்பிடப்பட்ட ரசீது வழங்கப்படும்.பின்னர் நடைபெறும் ஏலத்தில் மர உரிமையாளர் முன்னிலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் வருமானத்தில் 20 சதவீதம் வனத்துறைக்கும் 80 சதவீதம் மர உரிமையாளருக்கும் வழங்கப்படும். எனவே அனைவரும் அனைத்துப் பகுதிகளிலும் அச்சமின்றி சுதந்திரமாக சந்தன மரங்களை வளர்க்கலாம். இயற்கையாகவே வேலிகளிலும், தரிசு மற்றும் பாறை நிலங்களிலும் தானாகவே வளர்ந்து ஆண்டு முழுவதும் பசுமையாக காட்சி தரும் அழகிய தெய்வீக மரமாகும்.சந்தன மரங்களை வீடுகள், விவசாய நிலங்கள், கோவில், பள்ளி - கல்லூரி, தொழிற்சாலை வளாகங்கள் என அனைத்து பகுதிகளிலும் சுதந்திரமாக வளர்க்கலாம். விவசாயமாக செய்வதென்றால் 3 மீட்டருக்கு 3 மீட்டர் இடைவெளியில் சிறு குழிகள் அமைத்து ஏக்கருக்கு 450 மரங்களை வளர்க்க முடியும். சந்தன மரங்கள் மற்ற மரங்களுடன் வளரும் தன்மை கொண்டது. எனவே தென்னை, மா, சப்போட்டா, நெல்லி மற்றும் பலவகையான தோட்டங்களில் ஊடுபயிராக வளர்க்கலாம். இரண்டு சந்தன மரங்களுக்கு இடையில் மலைவேம்பு மரங்களை நடவு செய்து அதனுடன் செடி முருங்கை மரங்களையும் வளர்க்கலாம்.ஆறு மாதத்தில் செடி முருங்கை மூலம் நல்ல வருமானம் பெறலாம். ஏக்கருக்கு 5 இத்தாலிய தேனி பெட்டிக்களை வைப்பதன் மூலம் மருத்துவம் குணம் மிகுந்த முருங்கைத்தேன் சந்தன தேன் பெற்று நல்ல வருமானம் பெறலாம். எனவே சந்திலும் பொந்திலும் சந்தனம் வளர்ப்போம். முடிந்தால் சந்திர மண்டலத்திலும் சந்தனம் வளர்ப்போம். இந்நாள் இதனை செய்திடுவோம் 2020 அதனை நறுமணமாய் பெற்றிடுவோம். நானிலம் மணக்க மாநிலம் முழுக்க ஒருமனதாய் வளர்த்திடுவோம் சந்தனத்தை சுகவனமாய் அமைத்திடுவோம். இந்திய திருநிலத்தை எளிதாய் அடைத்திடுவோம். ஓசோன் துவாரத்தை இதுவே நமதினிய சுபவார்த்தை இதற்கே நமதுயிர் வாழ்க்கை என செயல்படுவோம். கலாமின் கனவை நிகழ்வாக்குவோம்.சந்தனம், சிவப்பு சந்தனம், மலைவேம்பு செடிமுருங்கை, வேங்கை மற்றும் பல வகையான வன மர விதைகளும் கால்நடை தீவன விதைகளான அசோலா வேலிமசால் கோ.எப்.எஸ்.29, சவுண்டால் விதைகளும் வளர்ப்புமுறை ஆலோசனைகளும் நேரிலும் தபால் மூலமும் ஆய்வு பண்ணை முகவரியில் பெறலாம். மேலும் விபரங்களுக்கு மொபைல்: 98429 30674- ஆ.சந்தன மோகன்சந்தன வளர்ச்சி ஆய்வு பண்ணைபல்லடம், கோயம்புத்தூர் -641 658.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !