தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி செலவை அரசே ஏற்கும் திட்டம்
உடுமலையில் வாழை, மா, கொய்யா, எலுமிச்சை, ஜாதிக்காய் சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு சாகுபடி செய்ய விருப்பம் உடைய விவசாயிகள் முன்பதிவு துவங்கி உள்ளது என டாக்டர் பா.இளங்கோவன் தோட்டக்கலை உதவி இயக்குநர் தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில், ஒரு ஏக்கர் பரப்பில் 160 மாங்கன்றுகள் நடவும் உரிய பராமரிப்பும் மேற்கொள்ள அடர் நடவு முறைக்கு எக்டருக்கு ரூ.9800/- மான்யம், திசுவாழை ஒரு எக்டருக்கு ரூ.30750/- மான்யம், எலுமிச்சைக்கு ரூ.12000/- மான்யம், வீரியவகை காய்கறி சாகுபடிக்கு எக்டருக்கு ரூ.20000/- மான்யம், கிழங்கு வகை மலர்கள் சாகுபடிக்கு ரூ.37500/- எக்டருக்கு மான்யம் தரப்படுகிறது. மிளகாய் மஞ்சள் மற்றும் பெரிய வெங்காயம் சாகுபடியை ஊக்குவித்து எக்டருக்கு ரூ.12000/- மான்யம், ஜாதிக்காய் சாகுபடிக்கு ரூ.20000/-மான்யம் உள்ளது.பாலிதீன் மல்ச்சிங் எனும் நிலப்போர்வை அமைத்திட ஒரு யூனிட்க்கு ரூ.16000/- மான்யம் உண்டு. மா சாதாரண முறையில் ஏக்கருக்கு 40 கன்றுகள் நடலாம். கொய்யா அடர்நடவு சாகுபடிக்கு எக்டருக்கு ரூ.17600/- மான்யம் உண்டு. கடந்த ஆண்டு நட கொக்கொ பெற்ற விவசாயிகள் நடப்பு ஆண்டு பராமரித்திட எக்டருக்கு ரூ.4000/- மான்யம், மா இரண்டாம் ஆண்டு பராமரிப்பு அடர்நடவு முறைக்கு ரூ.8000/- மான்யமும், சாதாரண முறை மா நட எக்டருக்கு ரூ.3300/- மான்யம் உள்ளது. எலுமிச்சை 2ம் ஆண்டு நடவுக்கு ரூ.5000/- மான்யம், பாபிஹவுஸ் திட்டம் ரூ.4.675/- லட்சம் 1000 சதுர மீட்டர் பரப்புக்கு தரப்படுகிறது. இதற்கு ரூ.10 லட்சம் முதலீடு ஆகும்.உதிரி மலர்கள் மல்லிகை, கனகாம்பரம், செண்டுமல்லி சாகுபடிக்கு எக்டருக்கு ரூ.10000/- மான்யம் ஆகும். நிழல் வலையில் டியுபுளர் அமைப்பு சாகுபடிக்கு ரூ.355/- சதுர மீட்டருக்கு வழங்கப்படும் மான்யம் பெற சுமார் ரூ.780/- சதுர அடிக்கு செலவு ஆகும். மண்புழு உரம் தயாரிப்பு பெரிய அளவில் செய்திட 1 லட்சம் செலவாகும். அதற்கு ரூ.30000/- மான்யம் உள்ளது.நவீன சாகுபடிக்கு டிராக்டர், பவர்டில்லர், விளக்குப்பொறி, பவர் ஸ்ப்ரேயர் பெற மான்யம் உள்ளது. சிறு விவசாயி, பெண் விவசாயி, ஆதி விவசாயிக்கு சிறப்பு சலுகைகள் உள்ளது. தேவைக்கு இன்றே பதிவு செய்ய சிட்டா, அடங்கல், ரேசன் கார்டு ஜெராக்ஸ், 3 போட்டோ, மண் மாதிரி நிர்மாதிரி முடிவு இணைத்து விண்ணப்பிக்கலாம். மேலும் விபரம்பெற 98420 07125 எண் உள்ளதே.