உள்ளூர் செய்திகள்

வாடன் சம்பா நெல்லில் கூடுதல் மகசூல்

வாடன் சம்பா நெல் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் அடுத்த, நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நீலபூ.கங்காதரன் கூறியதாவது:பல வித பாரம்பரிய ரக நெல் மற்றும் பயறு வகை பயிர்களை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், வாடன் சம்பா பாரம்பரிய ரக நெல் சாகுபடி செய்துள்ளேன்.இது, 160 நாட்களுக்கு பின் அறுவடை செய்யலாம். சம்பா பருவத்தில் சாகுபடி செய்தால் கணிசமான மகசூல் பெறலாம். பாரம்பரிய ரக நெல்லை, ரசாயனம் இன்றி சாகுபடி செய்யும் போது, 15 நெல் மூட்டைக்கும் குறைவாகவே மகசூல் கிடைக்கும். இந்த வாடன் சம்பா மூலிகை மற்றும் பஞ்சகாவ்யா ஆகிய இயற்கை உரங்கள் தெளிக்கும் போது, கூடுதல் மகசூல் பெறலாம். இந்த நெல்லை அரிசி, மாவு ஆகிய மதிப்பு கூட்டிய பொருளாக விற்பனை செய்யும் போது, இரட்டிப்பு வருவாய் ஈட்ட முடியும். குறிப்பாக, வாடன் சம்பா ரக அரிசி எளிதில் செரிமானமடையும் தன்மை உடையது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு:நீலபூ.கங்காதரன் 96551 56968


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !