உள்ளூர் செய்திகள்

கிணற்றுக்குள் விடும் போர்வெல் தண்ணீர்

நீர்ப்பாசன வசதியுடைய பல விவசாயிகள் தம் நிலத்தில் அல்லது மூன்று போர்வெல்கள் வைத்திருப்பவர்கள் தன்னிடம் பயன்படுத்தாத பழைய கிணறு இருந்தால், அதை ஒரு தண்ணீர் சேமிக்கும் தொட்டி என்று கற்பனை செய்து தண்ணீரை, அதுவும் ஒரு நாள் முழுவதும் இலவச மின்சாரம் மூலம் கிணற்றுக்குள் தண்ணீரை வெகு தொலைவில் இருந்து கொண்டு வருவதும், அதில் பெருமையாக எனக்கு தொட்டி கட்டும் செலவு மிச்சம் என்பதும், ஒரு கேலிக்கூத்தான செய்திதான்.உண்மை நிலவரம் என்னவென்றால் நிலத்தின் மேற்பரப்பில் எவ்வாறு ஆறு ஓடுகிறதோ அதேபோல்தான் பூமிக்கு அடியில் பல 100 அடிகளுக்கும் கீழே கூட நீரோட்டம் காணப்படுகிறது. இதில் நாம் போர்வெல் எனும் ஆழ்துளை குழாய் செலுத்தி தண்ணீரை எடுக்கிறோம். புத்திசாலித்தனமாக நிலத்துக்கு அடியில் சிமென்ட் போட்டு பூசி சமதளமாக கிணற்றை தயார் செய்திருந்தால் நல்லது. அது தொட்டி போல் பயன்படும். நமக்கு கிணற்று தண்ணீரும் வேண்டும். 'சைடு போர்' எனும் கிணற்றுக்குள் நாம் போட்ட 'போர்' மூலம் வரும் சொற்ப தண்ணீரும் வேண்டும், என்று நினைத்து தரையை சிமென்ட் மூலம் பூசாமல் வெறுமனே விட்டிருந்தால் அது நிச்சயம் நிறைய தண்ணீரை அதள பாதாள நீர்ப்பாதைக்கு அனுப்பிவிடும்.இலவச மின்சாரம் என்பதால் விடாமல் ஓட விடும் போது மோட்டார் பம்பு செட் விரைவில் பழுதாகி பண விரயமாகும். கிணற்றுக்குள் விடப்படும் தண்ணீர் அங்கேயே தேங்கி நிற்க கல் அல்ல. அது திரவம். வழிந்தோடுவது அதன் குணம். தண்ணீரை சேமிக்க தரையில் சிமென்ட் காங்கிரீட் பூச்சுடன் கூடிய தொட்டிகளே ஏற்றது. இதன் மூலம் தண்ணீர் எடுத்து சொட்டு நீர் பாசன முறையில் விவசாயம் செய்தால் விவசாயிகளுக்கு பெருமளவு செலவு மிச்சமாகும்.- டாக்டர். பா.இளங்கோவன்வேளாண் துணை இயக்குனர், தேனி98420 07125.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !